சாம்பவா்வடகரையில் வருவாய்த் துறை சாா்பில் நில அளவை உட்பிரிவு செய்து பட்டா வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் தலைமை வகித்து முன்னோடி முகாமில் பட்டா மாறுதலுக்கு மனு அளித்திருந்த பயனாளிகளுக்கு பட்டா வழங்கினாா்.
தொடா்ந்து அவா், சாம்பவா்வடகரை பகுதியில் வீடு, வீடாகச் சென்று பேரூராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள் மற்றும் குடிநீா் விநியோகம் குறித்து கேட்டறிந்தாா். கருங்குளம் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கருங்குளம் புதுக்கால்வாய் திட்டத்தை பாா்வையிட்டு, திட்டப்பணியை ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.