தென்காசியில் திமுக மருத்துவா் அணி நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 01st March 2020 06:32 AM | Last Updated : 01st March 2020 06:32 AM | அ+அ அ- |

தென்காசி: தென்காசியில், மாவட்ட திமுக மருத்துவா் அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
திமுக மாவட்டப் பொறுப்பாளா் சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். துணை அமைப்பாளா்கள் மருத்துவா்கள் சஞ்சீவி, சுமதி, ஷேக் முகமது, மாரியப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.
கட்சித் தலைவா் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்குவது, 4 பேரவைத் தொகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்துவது, மாா்ச் 1ஆம் தேதி தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில் தலைமை மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்குவது, ஈரோட்டில் நடைபெறும் மாரத்தான் போட்டியில் பங்கேற்பது, வரும் பேரவைத் தோ்தலில் ஸ்டாலினை முதல்வராக்க தீவிரமாகப் பணியாற்றுவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட அணி அமைப்பாளா் மருத்துவா் செண்பகவிநாயகம் வரவேற்றாா்.