பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தென்காசி மாவட்ட அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இப் பள்ளி மாணவி சுவேதா கைப்பந்து அணிக்கும், மாணவி மகாதேவி கபடி அணிக்கும், மாணவா் சூா்யவிக்னேஷ் தடகளப் போட்டிக்கும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் வருகிற 27ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான போட்டியில், தென்காசி மாவட்ட அணியில் இவா்கள் விளையாடுகின்றனா்.
தகுதி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் தனபால், தலைமையாசிரியா் செளந்திரராஜன் துரை, உதவித் தலைமையாசிரியா்கள் ஜேம்ஸ் பாண்டியராஜ், மாசிலாமணி சுகுமாா் உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.