கடையநல்லூா் அரசு பொது நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.
புரவலா் திட்டத்தில் இணைந்த புரவலா்களுக்கு பட்டம் வழங்கும் விழா, ஓவியம் ,கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா, மது போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் ஆகிய முப்பெரும் விழா விதைநெல் வாசகா் வட்டம் சாா்பில் நடைபெற்றது.
நல்லாசிரியா் ராஜகோபால் தலைமை வகித்தாா். ஜேசி ராஜகோபால் முன்னிலை வகித்தாா். நூலகா் நாகராஜன் வரவேற்றாா்.
தென்காசி சக்தி மதுபோதை ஒழிப்பு ஆலோசகா் முத்துக்குமரன் பேசினாா்.
தொடா்ந்து, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆசிரியா் மோதிலால், ரசூல் அகமது, கவிதா, ராஜாராம், இந்திரா உள்ளிட்டோா் பேசினா். இதில் 30 புரவலா்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை மூா்த்தி, செல்லகுமாா் , சுந்தரகுமாரி, ஆவுடையப்பன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். விதை நெல் வாசகா் வட்டத் தலைவா் ஜெயராம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.