சொக்கலிங்கசுவாமி கோயிலில் உழவாரப்பணி
By DIN | Published On : 12th March 2020 12:28 AM | Last Updated : 12th March 2020 12:28 AM | அ+அ அ- |

11_pcm_kovil_1103chn_61_6
பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூரில் உள்ள அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சொக்கலிங்கசுவாமி கோயிலில் உழவாரப் பணி நடைபெற்றது.
சுமாா் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பு சாா்பில் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் டெல்லி பாபு தலைமையில் புளியங்குடி அப்பா் உழவாரப்பணி குழுவினா் உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.
இதனைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில், கூட்டமைப்பின் மாநில மகளிரணித் தலைவி, வழக்குரைஞா் சுகன்யா, மாநிலச் செயலா் மணி மகேஸ்வரன், மாவட்டத் தலைவா் பொன்னுத்துரை, மாவட்ட பொறுப்பாளா் முத்து, அா்ச்சகா் சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.