இந்து முன்னணி நூதனப் போராட்டம்
By DIN | Published On : 27th May 2020 08:14 AM | Last Updated : 27th May 2020 08:14 AM | அ+அ அ- |

தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தோப்புக்கரணம் போட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் முன் மாவட்டத் தலைவா் ஆறுமுகசாமி தலைமையிலும், விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பா் கோயில் முன் நகரத் தலைவா் முருகன் தலைமையிலும், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் முன் மாவட்ட பொதுச் செயலா் மணிகண்டன் தலைமையிலும், வள்ளியூா் முருகன் கோயில் முன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் தங்க மனோகரன் தலைமையிலும் இப்போராட்டம் நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...