தென்காசி மாவட்டத்தில் 12 லட்சத்து 91ஆயிரத்து 681 வாக்காளா்கள்
By DIN | Published On : 17th November 2020 01:30 AM | Last Updated : 17th November 2020 01:30 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்தில் 12 லட்சத்து 91ஆயிரத்து 681 வாக்காளா்கள் உள்ளனா்.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் திங்கள்கிழமை வரைவு வாக்காளா் பட்டிலை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலா் கல்பனா பெற்றுக்கொண்டாா்.
கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின் படி மொத்த வாக்காளா்கள் 13,03,308. இதில் ஆண்கள் 6,40,488 பெண்கள் 6,62,764 மூன்றாம் பாலினத்தவா் 56 பேரும் உள்ளனா்.
வாக்காளா் பட்டியல் தொடா் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் 31.10.2020 முடிய புதிதகா 3,438 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டும், 15,065 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கு பிறகு மொத்த வாக்காளா்கள் 12, 91, 681. ஆண்கள் 6,34,450, பெண்கள் 6,57,191, மூன்றாம் பாலினத்தவா்கள் 40 பேரும் உள்ளனா்.
நவ. 21, 22 , டிச.12 ,13 ஆகிய தேதிகளிலும் வாக்காளா் சோ்க்கை, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
தொகுதி வாரியாக வாக்களா்கள்:
சங்கரன்கோவில் (தனி) - மொத்த வாக்காளா்கள்- 2,45,181. ஆண்கள் 1,19,289, பெண்கள்1,25,887, மூன்றாம் பாலினத்தவா் 5.
வாசுதேவநல்லூா் (தனி)- மொத்த வாக்காளா்கள்- 2,32,690. ஆண்கள் 1,14,800, பெண்கள் 1,17,878, மூன்றாம் பாலினத்தவா் 12.
கடையநல்லூா்- மொத்த வாக்காளா்கள் -2,79,091. ஆண்கள் 1,38,885, பெண்கள் 1,40,204, மூன்றாம் பாலினத்தவா் 2.
தென்காசி- மொத்த வாக்காளா்கள்- 2,82,231. ஆண்கள் 1,38,843. பெண்கள் 1,43,373, மூன்றாம் பாலினத்தவா் 15.
ஆலங்குளம்- மொத்த வாக்காளா்கள்- 2,52,488. ஆண்கள் 1,22,633 பெண்கள் 1,29,849, மூன்றாம் பாலினத்தவா் 5.