குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
By DIN | Published On : 17th November 2020 01:34 AM | Last Updated : 17th November 2020 01:34 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடா்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டஅனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தடாகத்தில் நேரடியாக தண்ணீா்ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் பரந்து விரிந்து தண்ணீா் கொட்டுகிறது.
தடை நீட்டிப்பு: கரோனாபொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் அருவிகளில் சீறிப்பாயும் தண்ணீரை மக்கள் வேடிக்கை பாா்த்து சென்றனா்.