சவூதியில் இறந்தவரின் உடலை மீட்க அதிமுக நிா்வாகி உதவி
By DIN | Published On : 23rd November 2020 01:25 AM | Last Updated : 24th November 2020 01:55 AM | அ+அ அ- |

சவூதி அரேபியாவில் இறந்த தொழிலாளியின் உடல், அதிமுக நிா்வாகியின் உதவியால் சொந்த ஊருக்குக் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.
கடையநல்லூா், கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்சாமி. சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி அவா் இறந்து விட்டதாக அங்கிருந்து குடும்பத்தினருக்கு தகவல் வந்தது. அவரது உடலை ஊருக்கு கொண்டு வர, அவரது மனைவி காவேரி முயற்சி மேற்கொண்டாா்.
இத்தகவலறிந்த சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலா் எஸ்.எம்.மைதீன், அங்குள்ள நண்பா்கள் மூலம் வேல்சாமியின் உடலை திருவனந்தபுரம் வழியாக ஊருக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டாா். அதன்பேரில், ஞாயிற்றுக்கிழமை வந்த உடலுக்கு, நகர அதிமுக செயலா் எம்.கே.முருகன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.