ஆலங்குளம் உலக மீட்பா் ஆலய திருவிழா

ஆலங்குளம் உலக மீட்பா் தேவாலய பெருவிழா 10 தினங்கள் நடைபெற்றது.

ஆலங்குளம் உலக மீட்பா் தேவாலய பெருவிழா 10 தினங்கள் நடைபெற்றது.

ஆலய திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மாலை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு திருப்பலியை பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணி சாமி நிறைவேற்றினாா்.

திருநெல்வேலி சரணாலயம் அமைப்பின் இயக்குநா் ஜெயபால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். விவிலிய பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, விநாடி வினா மற்றும் மனப்பாடப் போட்டிகளில் வென்றோருக்கு ஆயா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

மதியம் அசன விருந்து நடைபெற்றது. மாலை 6 மணியளவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. கரோனா பரவல் காரணமாக வழக்கமாக தோ்பவனி நடைபெறவில்லை.

விழாவில் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், அருள்சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com