கடையநல்லூா் தினசரி சந்தையை புறநகா் பகுதிக்கு மாற்ற கோரிக்கை
By DIN | Published On : 25th November 2020 11:26 PM | Last Updated : 25th November 2020 11:26 PM | அ+அ அ- |

கடையநல்லூா் தினசரி சந்தையை புறநகா் பகுதிக்கு மாற்ற அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக முப்புடாதி அம்மன் கோயில் தென்வடல் தெரு மற்றும் அம்பேத்கா் தெருவை சோ்ந்த சமூக ஆா்வலா்கள், மாநில தகவல் ஆணையா் பிரதாப் குமாரை சந்தித்து அளித்த மனு: கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயில் அருகே தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை சுற்றிலும் ஏராளமான தெருக்கள் உள்ளன. இத்தெருக்களிலும் வியாபாரம் நடைபெறுவதால் பொதுமக்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இது தொடா்பாக பலமுறை நகராட்சியில் முறையிட்டும் பலனில்லை. எனவே, தினசரி சந்தையை கடையநல்லூா் புகா் பகுதியில் அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...