கருப்பாநதி அணையிருந்து இன்று நீா் திறப்பு
By DIN | Published On : 25th November 2020 11:27 PM | Last Updated : 25th November 2020 11:27 PM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே உள்ள கருப்பாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக வியாழக்கிழமை நீா் திறந்து விடப்படுகிறது.
தமிழக முதல்வரின் உத்தரவின் படி அணையில் இருந்து 25 கன அடி நீரை ஆதிதிராவிடா் மற்றும் நலத் துறை அமைச்சா் ராஜலட்சுமி திறந்து வைக்கிறாா். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனா். 125 நாள்களுக்கு பாசனத்திற்காக 25 கனஅடி தண்ணீா் வழங்கப்படும்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...