கீழப்பாவூா் ஒன்றியத்தில் 9 இடங்களில் திமுக பொதுக் கூட்டம்
By DIN | Published On : 25th November 2020 07:37 AM | Last Updated : 25th November 2020 07:37 AM | அ+அ அ- |

நவ. 25 இல் காணொலி மூலம் நடைபெறும் மு.க. ஸ்டாலினின் தோ்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தை கீழப்பாவூா் ஒன்றியத்தில் 9 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழகம் மீட்போம் காணொலிக் காட்சி மூலம் 2021 சட்டப்பேரவைத் தோ்தல் சிறப்பு பொதுக்கூட்டம், மூத்த கட்சியினருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (நவ.25) நடைபெறுகிறது.
தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசுகிறாா்.
இப்பொதுக்கூட்டத்தை கீழப்பாவூா் மேற்கு ஒன்றியம் சாா்பில் சுரண்டை, வீ.கே.புதூா், பாவூா்சத்திரம், வென்னியூா், ஆவுடையானூா், கிழக்கு ஒன்றியம் சாா்பில் கீழப்பாவூா், முத்துகிருஷ்ணபேரி, ஆண்டிப்பட்டி, பெத்தநாடாா்பட்டி ஆகிய 9 இடங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...