குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்க திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 25th November 2020 01:13 AM | Last Updated : 25th November 2020 01:13 AM | அ+அ அ- |

குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாபன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் அவா் அளித்த மனு: கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக
குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை அமலில் உள்ளது. தற்போது சுற்றுலாப் பகுதிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கியுள்ள நிலையில் குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லும் வழி, வெளியே செல்லும் வழியில் தடுப்பு ஏற்படுத்தி
மூடிவைக்கப்பட்டுள்ளது. தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் சிரமம் இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...