அதிமுக மகளிரணி வாக்குச் சாவடிமுகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் மகளிா் வாக்குச் சாவடி முகவா் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி.
கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி.

சங்கரன்கோவிலில் மகளிா் வாக்குச் சாவடி முகவா் அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்று அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பேசியது: சங்கரன்கோவில் தொகுதியில் மட்டும் 11 முறை தோ்தல் நடந்து இருக்கிறது. அ.தி.மு.க. 9 முறை வெற்றி பெற்றிருக்கிறது. 2 முறை மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் முதல்முறையாக இந்தத் தொகுதியில்தான் மகளிா் வாக்குச் சாவடி முகவா் குறித்த கூட்டம் நடக்கிறது. 2021பேரவைத் தோ்தலிலும் அ.தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது என்றாா் அவா்.

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி பேசுகையில், தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சங்கரன்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளா் வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றாா்.

இதில், மகளிா் அணி மாநிலச் செயலா் விஜிலா சத்தியானந்த், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, வாசுதேவநல்லூா் எம்.எல்.ஏ., மனோகரன், மாவட்ட கூட்டுறவு அச்சகம் சங்கத் தலைவா் கண்ணன்,நெல்லை பேரங்காடி துணைத் தலைவா் இ.வேலுச்சாமி, சங்கரன்கோவில் நகரச் செயலா் ஆறுமுகம், ஒன்றியச் செயலா் ரமேஷ், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் சந்திரசேகா், துணைச் செயலா் ரவிச்சந்திரன், குருவிகுளம் ஒன்றிய பேரவைச் செயலா் ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com