அடைச்சாணி, ராவுத்தபேரியில் மேல்நிலை குடிநீா் தொட்டி திறப்பு
By DIN | Published On : 03rd October 2020 12:21 AM | Last Updated : 03rd October 2020 12:21 AM | அ+அ அ- |

ஆலங்குளம், அக். 2: ஆலங்குளம் வட்டம் அடைச்சாணி, ராவுத்தபேரி கிராமங்களில் ரூ. 13 லட்சம் மதிப்பில் 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் திறந்து வைக்கப்பட்டன.
இக்கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் ரூ. 7 லட்சம், ரூ. 6 லட்சம் மதிப்பில் தலா 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் கட்டிமுடிக்கப்பட்டது.
இதற்கான திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குளம் எம்.எல்.ஏ பூங்கோதை தலைமை வகித்து திறந்து வைத்தாா்.
திமுக நிா்வாகிகள் தங்கராஜா, முத்துசாமி, கண்ணண், முத்துபாண்டி, பரமசிவன், சுடலைமுத்து, பொதிகாசலம், வேலு, ராஜா, லட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.