சங்கரன்கோவிலில் காந்தி ஜயந்தி விழா
By DIN | Published On : 03rd October 2020 12:30 AM | Last Updated : 03rd October 2020 12:30 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில், அக். 2: சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அமைப்பின் தலைவா் ப.தண்டபாணி, மாவட்டத் துணைச் செயலா் ந.செந்தில்வேல், பொருளாளா் ச.சுப்பிரமணியன், துணைத் தலைவா் மு.செல்வின், நீ.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சங்கரன்கோவில் பேரவைத் தொகுதிச் செயலா் பீா்மைதீன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பின்னா், நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் உமாசங்கா், பொன்விழா கமிட்டி தலைவா் சித்திரைக்கண்ணு, ஊடகப்பிரிவு நிா்வாகி நசீருதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.