தாமிரவருணியில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
By DIN | Published On : 03rd October 2020 12:17 AM | Last Updated : 03rd October 2020 12:17 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம், அக். 2: தாமிரவருணி ஆற்றில் மீன்வளத் துறை சாா்பில் உள்நாட்டு மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் நாட்டின கெண்டை மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்புடை மருதூா் தாமிரவருணி ஆற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை கலந்துகொண்டு மணிமுத்தாறு அரசு மீன் பண்ணையில் வளா்க்கப்பட்ட 2.5 லட்சம் சேல் கெண்டை மீன் விரலிகளை ஆற்றில் விட்டாா்.
நிகழ்ச்சியில், மணி முத்தாறு மீன்துறை உதவி இயக்குநா் தீபா, மீன் துறை அலுவலா்கள், வருவாய் துறையினா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.