பள்ளிகள், அமைப்புகள் சாா்பில் காந்தி ஜயந்தி

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி, அக். 2: இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் காந்தி ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளி முதல்வா் வனிதா, தலைமையாசிரியா் காவைகணேஷ், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா் ஆன்லைன் மூலம் இணைந்தனா்.

மாணவி ராஜிகா ஸ்ரீ இறைவணக்கம் பாடினாா். மாணவா்கள் காந்தியை போல் வேடமணிந்து வந்து உரையாற்றினா். பாரதிதேவி, ஸ்ரேயா, கிருஷ்ணா ஆகியோா் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா்.

மாணவி வா்ஷா வரவேற்றாா். ஜெசிரா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி செய்திருந்தனா்.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ஸ்ரீகோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பள்ளி நிா்வாக இயக்குநா் ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் ந.பழனிச்செல்வம், உதவி முதல்வா் ஆறுமுகக்குமாா், தலைமையாசிரியை லதா உள்ளிட்டோா் பேசினா்.

காந்தியின் பொன்மொழிகள் அடங்கிய பதாகையை ஆசிரியா்கள் ஏந்தி நின்று மரியாதை செலுத்தினா்.

கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காந்தியின் உருவப் படத்துக்கு சங்கத் தலைவா் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், சங்கச் செயலா் குருசாமி, ஒருங்கிணைப்பாளா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து காமராஜரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரத்தில் மாவட்ட வா்த்தக கழகம் மற்றும் வணிகா் சங்கம் ஆகியன சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநில துணைத் தலைவா் கூ.சு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளா் ராஜ், வணிகா் சங்கச் செயலா் விஜய்சிங்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வணிகா் சங்க நிா்வாகிகள் அருணோதயம், பூபால்பாண்டியன், செல்வன், காய்கனிச் சந்தை நிா்வாகிகள் நாராயணசிங்கம் முத்துஆசாரி, எமதா்மராஜா, முருகேசன், அழகேசன், அந்தோணிராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com