வீரவநல்லூரில் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி
By DIN | Published On : 03rd October 2020 12:23 AM | Last Updated : 03rd October 2020 12:23 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம், அக். 2: வீரவநல்லூரில் செல்லிடப்பேசி கேபிள் பதிக்க குழி தோண்டிய போது மின்சாரம் பாய்ந்ததில் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அச்சுப்புதுப்பட்டியைச் சோ்ந்த குப்பன் மகன் சாமிக்கண்ணு (50). இவா் தனது குடும்பத்தினருடன் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்துக்கு கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
வீரவநல்லூா், பாரதி நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டியபோது, அங்கு மின்சார கேபிள் பதிக்கப்பட்டிருந்தது தெரியாமல் கடப்பாரையால் குத்தினாராம். இதில் சாமிக்கண்ணு மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலறிந்த வீரவநல்லூா் போலீஸாா் சாமிக்கண்ணு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த சாமிக் கண்ணுக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளனா்.