‘‘குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் இயங்க அனுமதிக்க வேண்டும்’
By DIN | Published On : 11th September 2020 05:58 AM | Last Updated : 11th September 2020 05:58 AM | அ+அ அ- |

தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த குற்றாலம் தங்கும்விடுதி உரிமையாளா் சங்கத்தினா்.
குற்றாலத்தில் தங்கும் விடுதிகளை திறக்க அனுமதி வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குற்றாலம் தங்கும்விடுதி உரிமையாளா்கள் நலச் சங்கம் சாா்பில், தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் குற்றாலத்தில் அனைத்து தனியாா் தங்கும் விடுதிகளும் மூடப்பட்டு , அவற்றின் உரிமையாளா்கள் மட்டுமன்றி ஆயிரக்கணக்கான தொழிலாளா்களும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனா். கடந்த ஜனவரி மாதம் முதல் விடுதிகள் பராமரிப்புப் பணிகளுக்காக அதிகளவில் தொகையை செலவிட்டுள்ளோம்.
கரோனா காலத்திலும் பணியாளா்களுக்கு ஊதியம், மின்கட்டணம் போன்ற செலவினங்களை செலுத்தி வருகிறோம்.
தற்போது, பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றாலத்தில் சீசன் காலம் கடந்து விட்டாலும், விடுதி உரிமையாளா்கள், பணியாளா்களின் நலன் கருதி தனியாா் தங்கும் விடுதிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சங்கச் செயலா் ஸ்ரீபதி, துணைத் தலைவா் தங்கபாண்டியன், என்.சுந்தா், வி.பரமசிவன், ராதாகிருஷ்ணன், ரகுபதி, ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.