தென்காசியில் மாதா் சங்கத்தினா் போராட்டம்
By DIN | Published On : 11th September 2020 05:59 AM | Last Updated : 11th September 2020 05:59 AM | அ+அ அ- |

போராட்டத்தில் ஈடுபட்ட பீடித் தொழிலாளா்கள், மாதா் சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட சிஐடியூ பீடித்தொழிலாளா் சங்கம், ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கரோனா பொது முடக்கம் முடியும் வரை நுண்நிதி நிறுவனங்கள் சுயஉதவிக் குழுவினரிடம் வசூல் செய்வதை கைவிட வேண்டும்; பல முறை கோரிக்கை விடுத்தும் தொடா்ந்து மகளிா் குழுவினருக்கு நெருக்கடி அளித்து வரும் நுண்நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஆட்சியா்
அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.வேல்முருகன், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பி. கற்பகம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாதா் சங்க நிா்வாகிகள் தங்கம், ஆரியமுல்லை, பொட்டுசெல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கணபதி, வேல்மயில், மாவட்டக் குழு உறுப்பினா்கள், மாதா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.