பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 11th September 2020 05:59 AM | Last Updated : 11th September 2020 05:59 AM | அ+அ அ- |

49369_pcm_admk_0909chn_61_6
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவைச்செயலா் கே.ஆா்.பி.பிரபாகரன் ஆகியோா் பேசினா்.
மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், கனகராஜ், அருவேல்ராஜ், பேரூா் செயலா் ஜெயராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் மகபூப்மசூது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.