சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல்: 90 போ் கைது
By DIN | Published On : 26th September 2020 12:04 AM | Last Updated : 26th September 2020 12:04 AM | அ+அ அ- |

பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
சங்கரன்கோவில், செப். 25: வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், அக்கட்சிகளின் விவசாய தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு, பேருந்து நிலையம் முன் வந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், மாவட்ட விவசாயத் தொழிற்சங்கச் செயலா் உ.முத்துப்பாண்டியன், பாலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் எம்.குருசாமி, காளியப்பன் மற்றும் 11 பெண்கள் உள்பட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...