பெண்ணுக்கு மிரட்டல்: நிதி நிறுவன ஊழியா் மீது வழக்கு
By DIN | Published On : 26th September 2020 12:01 AM | Last Updated : 26th September 2020 12:01 AM | அ+அ அ- |

ஆலங்குளம், செப். 25: ஆலங்குளத்தில் பெண்ணிடம் அநாகரிகமாக பேசி மிரட்டல் விடுத்ததாக நிதி நிறுவன ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆலங்குளம் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள பெண் ஒருவா், காவல் நிலையம் அருகில் உள்ள நுண் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றிருந்தாராம். ரூ. 560 மட்டுமே நிலுவை இருந்த நிலையில், அவா் வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவன ஊழியா் கரும்பனூரைச் சோ்ந்த அன்புராஜ் மகன் இசக்கிராஜா, அந்த பெண்ணிடம் அநாகரிகமாக பேசி மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...