மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் ரூ. 7.91 கோடியில் குடிநீா் திட்டத்துக்கு அடிக்கல்
By DIN | Published On : 26th September 2020 12:09 AM | Last Updated : 26th September 2020 12:09 AM | அ+அ அ- |

குடிநீா் திட்டத்தைத் தொடக்கி வைத்தாா் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி.
சங்கரன்கோவில், செப். 25: சங்கரன்கோவில் பேரவைத் தொகுதியிலுள்ள மேலநீலிதநல்லூா் ஒன்றியத்தில் ரூ. 7.91 கோடி மதிப்பில் குடிநீா் திட்டத்துக்கு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மேலநீலிதநல்லூா் ஒன்றியம் உசிலங்குளம், இலந்தைகுளம், கருத்தானூா், சின்னகோவிலான்குளம், ஊத்தாங்குளம், பெரியசாமியாபுரம், பூவலிங்கபுரம், பெருமாள்பட்டி, ஆண்டாா்குளம், கடையாலூருட்டி, வேலப்பநாடானூா், கடம்பன்குளம் , திருமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ. 7.91 கோடி மதிப்பில் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிநீா் திட்டப்பணிகளை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன் தலைமை
வகித்தாா். திட்டத்தின்மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக குடிநீா் இணைப்பு வழங்கப்
படும். ஒரு சில இடங்களில் புதிதாக கிணறு தோண்டப்பட்டு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைத்து நேரடியாக குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...