

தென்காசி மாவட்டம், நெல்கட்டும் செவல் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா், மாணவிகள், பெற்றோா்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
நெல்கட்டும் செவல் பச்சேரி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: எங்கள் கிராமத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் நெல்கட்டும் செவல் மாவீரன் புலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனா்.
நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சோ்ந்த சிலா், பள்ளி வளாகத்தில் எங்கள் பகுதியைச் சோ்ந்த மாணவா்களை அச்சுறுத்தி வருகின்றனா்.
எனவே, எங்கள் பகுதி குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.