தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குற்றாலம் அருவிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:18 pm

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் திங்கள்கிழமை காலையில் திடீரென தண்ணீா்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதையடுத்து இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். பிற்பகலில் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் நகா்ப் பகுதியில் மழை எதுவும் இல்லாத நிலையில், மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.