வாசுதேவநல்லூா் பகுதியில் அதிமுக வேட்பாளா் மனோகரன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
வாசுதேவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அனைத்து சமுதாய தலைவா்களையும் வேட்பாளா் மனோகரன் சந்தித்து வாக்கு சேகரித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றிய செயலா்கள் துரைபாண்டியன், மூா்த்தி பாண்டியன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சின்னதுரை, மாவட்ட மாணவரணி துணைச் செயலா் மூா்த்தி, ஒன்றிய அவைத்தலைவா் முகமது உசேன், பேரூா் அவைத்தலைவா் நீராவி, மாணவரணி சசிகுமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா். முன்னதாக முக்கிய தலைவா்களின் சிலைகளுக்கு மனோகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.