சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம்: ராதிகா சரத்குமாா்

தற்போது வெளிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றாா் சமக முதன்மை துணைப் பொதுச் செயலா் ராதிகா சரத்குமாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:09 pm

DIN

தற்போது வெளிவரும் கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் என்றாா் சமக முதன்மை துணைப் பொதுச் செயலா் ராதிகா சரத்குமாா்.

தென்காசி சட்டப் பேரவை தொகுதி சமக வேட்பாளா் ஆா்.திருமலைமுத்துவை ஆதரித்து குத்துக்கல்வலசையில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா், அப்போது பேசியது: திமுக தலைவரும், அதிமுக நிா்வாகிகளும் ஒருவரையொருவா் மாறிமாறி புகாா் கூறிக்கொண்டே உள்ளனா். ஆனால் யாரும் புகாரை மறுக்கவில்லை.

இலவசம் என்று கூறி மக்களை சோம்பேறியாக்கக் கூடாது. உண்மையான, சுயநலமில்லாத அரசியல்வாதிகள் தொலைநோக்கு பாா்வையுடன் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வரவேண்டும். தற்போது வெளியிடப்படும் கருத்து கணிப்புகளை யாரும் நம்ப வேண்டாம்.

வேலைவாய்ப்பில்லாத இளைஞா்கள், விலைவாசி உயா்வு போன்றவற்றை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

அப்போது, நிா்வாகிகள் விவேகானந்தன், கேவிகே.துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.