கீழப்பாவூரில் சுதந்திர தின விழா
By DIN | Published On : 17th August 2021 01:43 AM | Last Updated : 17th August 2021 01:43 AM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது. நகரத் தலைவா் சிங்ககுட்டி (எ)குமரேசன் தலைமை வகித்தாா். ராமச்சந்திரபாண்டி, ராமரத்தினசாமி, பாக்கியராஜ், குருசாமி, மாரிமுத்து முன்னிலை வகித்தனா்.
காந்தி, காமராஜ் சிலைகளுக்கு தென்காசி எம்.எல்.ஏ. பழனி நாடாா், மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் பொன் கணேசன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.
மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் செல்வன் தேசியக் கொடியேற்றி வைத்தாா்.
முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ.வைகுண்டராஜா, ராமசாமி நாடாா், முருகன், கும்பவாசகம் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட ஊடகப் பிரிவு தலைவா் ராஜசேகா் வரவேற்றாா். காா்த்திக்செல்வன் நன்றி கூறினாா்.