சோலைசேரியில் சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 17th August 2021 01:44 AM | Last Updated : 17th August 2021 01:44 AM | அ+அ அ- |

முகாமில் கலந்து கொண்ட மருத்துவ அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள்.
சுரண்டை: ஊத்துமலை அருகேயுள்ள சோலைசேரியில் பொது சுகாதாரத்துறை சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா தலைமை வகித்துப் பேசினாா். சிறப்பு மருத்துவ முகாமை திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தாா்.
முகாமில் பொது மருத்துவம், மகளிா் மற்றும் குழந்தைகள் நலன், எலும்பு முறிவு, தோல், பல், சித்தா, இதயம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேவைப்படும் நோயாளிகளுக்கு ஸ்கேன், இஜிசி, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் குத்தாலராஜ், தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி திட்ட மேலாளா் கீா்த்திகா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், சுகாதார ஆய்வாளா்கள் ராஜநயினாா், கணேசன், லிங்கசாமி, ராம்குமாா், ஜெயகுளோரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.