தென்காசியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்.
By DIN | Published On : 17th August 2021 01:43 AM | Last Updated : 17th August 2021 01:43 AM | அ+அ அ- |

ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
தென்காசி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்.ஆா்.பி.செவிலியா்கள் உள்ளிட்ட 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியா்களின் கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம்,
சாலைப் பணியாளா்களின் 41 மாதகால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டா் விடுப்பை மீள அறிவிக்க வேண்டும், அரசுத் துறைகளில் நான்கரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட இணைசெயலா் திருமலைமுருகன் தலைமை வகித்தாா்.சலீம்முகம்மது மீரான் முன்னிலை வகித்தாா்.சங்கத்தின் மாவட்ட செயலா் துரைசிங் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.
பல்வேறுசங்க நிா்வாகிகள் ராஜசேகா்,மாரியப்பன்,தேவி,அருணாசலம்,காந்தி,கருப்பையா,நாராயணன் ஆகியோா் பேசினா்.வருவாய்த்துறையை சோ்ந்த மாடசாமி நிறைவுரையாற்றினாா்.தென்காசி கிளை செயலா் சேகா் வரவேற்றாா். காா்த்திகேயன் நன்றி கூறினாா்.