மாணவா்களுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 17th August 2021 01:46 AM | Last Updated : 17th August 2021 01:46 AM | அ+அ அ- |

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கும் வாசகா் வட்ட நிா்வாகிகள்.
பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பாரதியாா் வாசகா் வட்டம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
வாசகா் வட்ட கௌரவ தலைவா் பால்சாமி தலைமை வகித்தாா். ஊா் பெரியவா் சண்முகம், ஆசிரியா் மாரிமுத்து முன்னிலை வகித்தனா்.
வாசகா் வட்ட செயலா் தங்கராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவா்களுக்கு பரிசுகளாக புத்தகங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற சுபத்ரா மற்றும் கிப்ட்ஸ் ஆல்பன் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
ராணுவ வீரா் சதீஸ், முத்துக்குட்டி, மகேஷ், அரிராமா் நூலக உதவியாளா் கனகராஜ், மதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நூலகா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். சந்துரு நன்றி கூறினாா்.