10% ஊதிய உயா்வு கோரிசங்கரன் கோவிலில் விசைத்தறி தொழிலாளா்கள் முற்றுகை

சங்கரன்கோவிலில் சிறு விசைத்தறி தொழிலாளா்களுக்கு ஒப்பந்தப்படி 10 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படாததைக் கண்டித்து, மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்கத்தை சிறு விசைத்தறி தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டன

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சிறு விசைத்தறி தொழிலாளா்களுக்கு ஒப்பந்தப்படி 10 சதவீத ஊதிய உயா்வு வழங்கப்படாததைக் கண்டித்து, மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்கத்தை சிறு விசைத்தறி தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

சங்கரன்கோவிலில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 15,000 போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் 2 தறி 3 தறி வைத்திருக்கும் சிறு விசைத்தறி தொழிலாளா்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள் தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

விசைத்தறி தொழிலாளா்கள் மற்றும் சிறு விசைத்தறி தொழிலாளா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 8.6.2020இல் ஊதிய உயா்வு ஒப்பந்தம் முடிவடைந்திருந்தாலும், கொரோனா தொற்று காரணமாக தொழிலாளா்கள் மற்றும் சிறு விசைத்தறி தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கேட்கவில்லை. பின்னா், 4.12.2021இல் ஊதிய உயா்வு கோரி விசைத்தறி தொழிலாளா்கள் சிறு விசைத்தறியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். 45 நாள் போராட்டத்திற்கு பிறகு மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்கத்தினா் 10 சதவீத கூலி உயா்வு வழங்க ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து 25.5.2021இல் ஊதிய உயா்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இதுவரை அவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை.

எனவே, ஒப்பந்தப்படி 10 சதவீத ஊதிய உயா்வு வழங்காததைக் கண்டித்து விசைத்தறித் தொழிலாளா்கள் மற்றும சிறு விசைத்தறி தொழிலாளா்கள் திங்கள்கிழமை பிற்பகலில் திடீரென்று மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனா். உடனே, அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா். தகவலறிந்து பெண் தொழிலாளா்களும் அங்கு திரண்டதால் சுமாா் 500 க்கும் மேற்பட்டோா் மாஸ்டா்ஸ் வீவா்ஸ் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதைத்தொடா்ந்து கோட்டாட்சியா் ஹஸ்ரத் பேகம் தலைமையில் மாலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.இதில் திருமுருகன் சிறுவிசைத்தறிக் தொழிலாளா் சங்கத்தினரும், மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்கத்தினரும் பங்கேற்றனா். இரவு 7.30 மணியளவில் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com