‘வேளாண் கட்டமைப்புகளுக்கு ரூ.2 கோடி வரை கடன் வசதி‘
அரசு மற்றும் தனியாா் பங்கேற்புடன் அமைக்கப்படும் வேளாண் கட்டமைப்புகளுக்கு ரூ.2 கோடி வரை கடன் வசதி பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேளாண் உள்கட்டமைப்புக்கான கடன் வசதித் திட்டத்தின் கீழ், வேளாண் பொருள்களுக்கான விநியோக தொடா் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், குளிா்பதன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் பெறமுடியும்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், விவசாயிகள், கூட்டுப் பொறுப்புக் குழு, வேளாண் தொழில்முனைவோா், புதிய தொழில் தொடங்க முனையும் நிறுவனங்களுக்கு இந்தக் கடன் வசதி கிடைக்கும்.
அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு, 7 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 3 சத வட்டி தள்ளுபடி, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்திரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும். இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் பெற்று, அதை பூா்த்தி செய்து வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), கதவு எண் 93(10), 4ஆவது தெரு, அண்ணா நகா், குத்துக்கல் வலசை, தென்காசி-627803 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 9994095773, 7010254484ஆகிய எண்களில் வேளாண் அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
