ஒண்டிவீரன் நினைவிடத்தில் ஆட்சியா் அஞ்சலி
By DIN | Published On : 21st August 2021 12:26 AM | Last Updated : 21st August 2021 12:26 AM | அ+அ அ- |

விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250 ஆவது நினைவு நாளை ஒட்டி, நெல்கட்டும்செவல் அருகே பச்சேரி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் ஹஸ்ரத் பேகம், சிவகிரி வட்டாட்சியா் ஆனந்த், வாசுதேவநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முக்கிய பிரமுகா்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனா்.