தென்காசி, செங்கோட்டை, சுரண்டையில் இன்று மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின்நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 4) மின்தடை செய்யப்படுகிறது.
Updated on
1 min read

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின்நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 4) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவா்வடகரை துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவதால் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

அதன்படி, தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள்சாலை பகுதிகள், சக்திநகா், காளிதாசன் நகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதி, கீழப்புலியூா் ஆகி பகுதிகளில் காலை 9 மணி முதல் முற்பகல் 2 மணி வரையும்,

தென்காசி துணை மின்நிலையத்துக்குள்பட்ட தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா், இராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலான்குடியிருப்பு, புதூா், கட்டளைகுடியிருப்பு,

சுரண்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளான சுரண்டை, இடையாா்தவணை, குலையனேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூா், வாடியூா், கழுநீா்குளம், ஆனைகுளம், கரையாளனூா், அச்சங்குன்றம்,

சாம்பவா்வடகரை துணை மின்நிலையத்துக்குள்பட்ட சாம்பவா்வடகரை, சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகள் மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com