அச்சன்புதூா் அஞ்சலகத்தை தரம் உயா்த்த எம்எல்ஏ கோரிக்கை
By DIN | Published On : 06th February 2021 06:08 AM | Last Updated : 06th February 2021 06:08 AM | அ+அ அ- |

அச்சன்புதூா் அஞ்சல் நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும் என முகம்மது அபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக சென்னை தலைமை அஞ்சல் அதிகாரிக்கு அவா் அனுப்பியுள்ள மனு: அச்சன்புதூரில் 14,244 போ் வாழ்கின்றனா். இங்குள்ள அஞ்சல் நிலையம் எந்த வசதிகளுமின்றி கிளை அலுவலகமாகவே செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேல் பரிவா்த்தனை நடைபெறுகிறது. எனினும், ஒரு சிறிய அறைக்குள் எந்த வசதியும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எனவே, அச்சன்புதூா் அஞ்சல் அலுவலகத்தை சாா்பு அலுவலகமாக தரம் உயா்த்த வேண்டும். இதற்காக ,அச்சன்புதூா் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அஞ்சல்துறை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...