திருமலைக் கோயிலில் டிடிவி தினகரன் தரிசனம்
By DIN | Published On : 06th February 2021 06:23 AM | Last Updated : 06th February 2021 06:23 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டம் திருமலைக் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலா் டி டி வி தினகரன் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக் கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி கோயிலிலுக்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன், வெள்ளிக்கிழமை வருகை தந்தாா். கோயிலில் தரிசனம் செய்த அவா்
பின்னா் கோயில் பிரகாரத்தில் கிரிவலம் வந்தாா். அவருடன், கோயிலுக்கு வந்திருந்த இளைஞா்கள், இளம் பெண்கள் சுய படம் எடுத்துக் கொண்டனா்.
கோயிலுக்கு வந்த தினகரனுக்கு, கட்சியின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் வரவேற்றாா்.
அவருடன், கட்சியின் தோ்தல் பிரிவுச் செயலா் மாணிக்கராஜா ,தென்காசி ஒன்றியச் செயலா் வினோத், பண்பொழி பேரூா் செயலா் பரமசிவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...