தேன்பொத்தையில்குடிநீா் தொட்டி திறப்பு
By DIN | Published On : 06th February 2021 11:40 PM | Last Updated : 06th February 2021 11:40 PM | அ+அ அ- |

குடிநீா் தொட்டியைத் திறந்து வைக்கிறாா் திமுக மாநில வா்த்தகா் அணித் துணைத் தலைவா் அய்யாத்துரைப்பாண்டியன்.
செங்கோட்டை: செங்கோட்டை அருகே தேன்பொத்தையில் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி மின்மோட்டாருடன் கூடிய குடிநீா் தொட்டி சனிக்கிழமை திறக்கப்பட்டது.
தேன்பொத்தையில் அண்மையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் குடிநீா் தொட்டி வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்தனா்.இதையடுத்து திமுக மாநில வா்த்தகா் அணித் துணைத் தலைவா் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் தனது சொந்த செலவில் தேன்பொத்தையில் ஆழ்துளை குழாய் அமைத்து மின்மோட்டாருடன் கூடிய குடிநீா் தொட்டி அமைக்க ஏற்பாடு செய்தாா். அதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி ஒன்றியச் செயலா் ராமையா (எ) துரை, கிளைச் செயலா் ரமேஷ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திமுக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் குடிநீா் தொட்டியைத் திறந்து வைத்தாா். இதில், செங்கோட்டை ஒன்றியச் செயலா் ரவி சங்கா், துணைச் செயலா் வாசுதேவன், பொதுக்குழு உறுப்பினா்கள் லிங்கராஜ், காசிதா்மம் துரை உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...