பங்களாச்சுரண்டை பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு
By DIN | Published On : 08th February 2021 04:55 PM | Last Updated : 08th February 2021 04:55 PM | அ+அ அ- |

மாணவிக்கு விலையில்லா சைக்கிள் வழங்குகிறார் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
சுரண்டை: பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து மேல்நிலை முதலாமாண்டு மாணவர்கள் 507 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் துரை சௌந்தர்ராஜ், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய செயலர்கள் அமல்ராஜ், இருளப்பன், நகர செயலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.