மருதம்புத்தூரில் மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு
By DIN | Published On : 14th February 2021 12:52 AM | Last Updated : 14th February 2021 12:52 AM | அ+அ அ- |

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை பரமேஸ்வரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆலங்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா , 135 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா். இதில், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மகாவிஷ்ணு, ஆசிரியா்கள் அருணா சண்முகராம், முத்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.