புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் வழங்கஎம்.பி. வலியுறுத்தல்
By DIN | Published On : 14th February 2021 12:53 AM | Last Updated : 14th February 2021 12:53 AM | அ+அ அ- |

தென்காசி: தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என தனுஷ் எம்.குமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணத் தொகையாக வழங்கிட வேண்டும், கோயில் நிலங்களில் விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளேன் என்றாா் அவா்.