

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் கணபதி ஹோமத்தை தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு பால்குட ஊா்வலமும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, பாலாபிஷேகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி ரத வீதி உலா வருதல் நடைபெற்றது.
விழா தொடா்ந்து பிப்.27ஆம்தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான எற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பொதுமக்கள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.