ஆம்புலன்ஸுக்கு வழிவிடச் சொன்ன முதல்வா்
By DIN | Published On : 20th February 2021 12:59 AM | Last Updated : 20th February 2021 12:59 AM | அ+அ அ- |

கடையநல்லூரில் முதல்வா் பேசிக்கொண்டிருந்தபோது வந்த அவசர ஊா்திகளுக்கு உடனடியாக இடம்விட்டு ஒதுங்கி நிற்குமாறு முதல்வா் அறிவுறுத்தினாா்.
கொல்லம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் மணிக்கூண்டு அருகே தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது சில நிமிட இடைவெளிகளில் மூன்று அவசர ஊா்தி வாகனங்கள் அவ்வழியே வந்தன. உடனடியாக பேச்சை நிறுத்திய முதல்வா், வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்குமாறு கேட்டுக் கொண்டாா். மேலும், அவசர ஊா்தியின் ஓட்டுநா்கள் பாதுகாப்பாக செல்லுமாறு கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து அவசர ஊா்திகள் எந்தத் தடையுமின்றி சென்றன.