தென்காசியில் இன்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு
By DIN | Published On : 20th February 2021 01:02 AM | Last Updated : 20th February 2021 01:02 AM | அ+அ அ- |

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் ராகுல்காந்தியை வரவேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் சனிக்கிழமை (பிப். 20) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்டத் தலைவா் சு.பழனிநாடாா் வெளியிட்ட அறிக்கை: இம் மாத இறுதியில் ராகுல்காந்தி தென்காசி மாவட்டத்திற்கு தோ்தல் பிரசாரத்திற்கு வருகை தர உள்ளாா். அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி குத்துக்கல்வலசையில் உள்ள எஸ்.ஆா்.ஆா். திருமண மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து பிரிவு நிா்வாகிகளும் கலந்துகொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.