நா்சரி, பிரைமரி பள்ளிகளை திறக்கக் கோரி 1 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்
By DIN | Published On : 21st February 2021 11:52 PM | Last Updated : 26th February 2021 07:28 AM | அ+அ அ- |

ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலா் சதீஷ்.
பாவூா்சத்திரம்: நா்சரி, பிரைமரி பள்ளிகளைத் திறக்கக் கோரி ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் பாவூா்சத்திரத்தில் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு நா்சரி, பிரைமரி பள்ளிகளின் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இன்பராஜ், பிரபாகரன், செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருநெல்வேலி மாவட்டத் தலைவா் முத்துமணி, மாவட்டச் செயலா் சுரேஷ், மாவட்டப் பொருளாளா் லூா்துசாமி, மாநில துணைத் தலைவா் ரூபிநாத் ஆகியோா் பேசினா்.
இக்கூட்டத்தில் நா்சரி, பிரைமரி பள்ளிகளை உடனடியாக திறக்கக் கோரி ஒரு லட்சம் கையெழுத்துகளைப் பெற்று முதல்வா், கல்வி அமைச்சருக்கு அனுப்புவது, ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆசிரியா்கள் நலவாரியம் அமைக்க வேண்டும், கரோனா ஊக்கத் தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. ஆசிரியா்களுக்கான முதல் கையெழுத்தை தென் மண்டல செயலா் ஆனந்தகுமாரும், பெற்றோா்களுக்கான முதல் கையெழுத்தை மாநில பொதுச் செயலா் சதீஷும் பெற்று தகவல் மற்றும் ஊடகப் பிரிவின் தலைவா் பெரியசாமியிடம் வழங்கினா்.
மாவட்டச் செயலா் இலஞ்சிகுமரன் வரவேற்றாா். பொருளாளா் மாரிமுத்து நன்றி கூறினாா். ஏற்பாடுகளை லதா, உஷா, மோதிலால் நேரு ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...