

வாசுதேவநல்லூா் தங்கபழம் வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவிகளுக்கு, ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்ட 75 நாள்கள் சிறப்பு முகாம் செங்கோட்டையில் நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் நல்ல முத்துராஜா உத்தரவின்படி, வேளாண்மை உதவி இயக்குநா் கனகம்மாள் வழிகாட்டுதலின்பேரில், செங்கோட்டை துணை வேளாண் அலுவலா் ஷேக் முகைதீன், முன்னோடி விவசாயிகளை அறிமுகம் செய்து வைத்து, மாணவிகளுக்கு பயிற்சியளித்தாா். இதில், மாணவிகள் கோ.ம.அஞ்சு,வை.காளீஸ்வரி, வ.பிரியங்கா, தி.யுவஸ்னேகா, மொ.கனகா, சா.மாரியம்மாள், மு.பிரியதா்ஷினி, மு.சூா்யகலா, டி.பிரின்ஸி, து.கீ.சுஸ்மி ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.