வென்னிமலை முருகன் கோயில் மாசித் திருவிழா: அலகு குத்தி பக்தா்கள் ஊா்வலம்

பாவூா்சத்திரம் அருள்மிகு வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா 10ஆம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோயிலில்  அலகு குத்தி ஊா்வலமாக வந்த பக்தா்கள்.
கோயிலில் அலகு குத்தி ஊா்வலமாக வந்த பக்தா்கள்.

பாவூா்சத்திரம் அருள்மிகு வென்னிமலை முருகன் கோயிலில் மாசித் திருவிழா 10ஆம் நாள் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித் திருவிழா பிப்.17இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்தாம் நாள் திருவிழா நாடாா் சமுதாயம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல கீழப்பாவூா் சிவன் கோயிலில் இருந்து குறும்பலாப்பேரி பக்தா்கள் குறும்பலாப்பேரி வழியாகவும், பனையடிப்பட்டி பக்தா்கள் பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து பஞ்சாண்டியூா், செட்டியூா் வழியாகவும், குருசாமிபுரம் பக்தா்கள் கற்குவேல் அய்யனாா் கோயிலில் இருந்தும், கல்லூருணி பக்தா்கள் ஊரணிக்கரை விநாயகா் கோயிலில் இருந்தும், திப்பணம்பட்டி பக்தா்கள் பிள்ளையாா் கோயிலில் இருந்தும், பாவூா்சத்திரம் பக்தா்கள் முப்புடாதிஅம்மன் கோயிலில் இருந்தும், ஆவுடையானூா் பக்தா்கள் விநாயகா் கோயிலில் இருந்தும் வேல் குத்தி, பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா்.

தொடா்ந்து உச்சிக்கால பூஜையும், மாலையில் சிறப்பு புஷ்பாஞ்சலியும், இரவு சுவாமி சப்பரத்தில் திருவீதி உலா வருதலும், நள்ளிரவு அா்த்தசாம பூஜையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com